மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டு பின்னர் அங்கு பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த குகையில் 18 மணிநேரம் தியானம் மேற்கொண்டார்.

Advertisment

twinkle khanna trolls modi meditation

மோடியின் இந்த தியானம் பாஜக கட்சியினரை குஷிபடுத்தினாலும், பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த வகையில் மோடியின் இந்த தியானத்தை கலாய்க்கும் வகையில் பாலிவுட் நடிகையும், நடிகர் அக்சய்குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கண்ணா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அவர் தனது பதிவில், "கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மிகப் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, பயிலரங்கு ஒன்றை ஆரம்பிக்கிறேன். எல்லோரும் அதில் கலந்துகொள்ளுங்கள். அதன் பெயர் 'தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும். திருமண போட்டோகிராபியை அடுத்து, தியான போட்டோகிராபிதான் அடுத்த பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என தியானம் செய்வது போல புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்து வந்துகொண்டிருக்கின்றன.

Advertisment