ADVERTISEMENT

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசை வைத்து மிரட்டுகிறார் - சுயேச்சை கவுன்சிலர் கலெட்டரிடம் புகார்

12:29 PM Jan 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT



பின்னர் புகார் மனு அளித்தது குறித்து கூறுகையில் "நான் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு 12வது வார்டிலும், 10வது வார்டில் எனது மனைவி சண்முகப்பிரியாவும், 8வது வார்டில் பழனிசாமி என்பவரும், 9வது வார்டில் விஜயலட்சுமி ஆகியோர் என ஒரு அணியாக நின்று சுயேட்சையாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

பெருந்துறை யூனியனில் மொத்தம் 12 வார்டுகள். இதில் அ.தி.மு.க. 5, தி.மு.க. 3, சுயேட்சையான நாங்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுயேட்சையான நாங்கள் நான்கு பேரும், தி.மு.க.வோடு சேர்ந்தால் நாங்கள் தான் மெஜாரிட்டி. யூனியன் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நாங்கள் தான் வெற்றி பெறும் நிலை இருக்கிறது.

இதை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் எங்களை போலீஸ் மூலம் மிரட்டுகிறார். குறிப்பாக நாங்கள் வேட்புமனுத்தாக்கல் செய்த நாளில் இருந்து பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ. செந்தில்குமார் ஆகியோர் பல்வேறு நிலைகளில் எங்கள் அணிக்கு பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.


எங்களின் வேட்புமனு தாக்கலின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் எங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். அதே போல எனக்கு சொந்தமான விடுதியில் நள்ளிரவில் சோதனை என்ற பெயரில் போலீஸ் அத்துமீறி செயல்பட்டதோடு விடுதியில் யாரும் தங்க கூடாது என்று மிரட்டி சென்றுள்னர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடந்த போது வலுக்கட்டாயமாக எனது அணியை சேர்ந்தவர்களை போலீசார் வெளியேற்றினர். இது தவிர வேண்டுமென்றே என் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வகைகளில் திட்டமிட்டு எங்கள் அணியை சேர்ந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். சட்டத்தை மீறி போலீசார் அச்சுறுத்தி வருகின்றனர்.


எனவே நடைபெற உள்ள தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் இந்த டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் இருந்தால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்புக்கு ஆதரவாக அதிகார துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதுள்ள டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர் ஆகியோரை நாங்கள் பதவி ஏற்கும் பணியில் நியமிக்க கூடாது." என்றார்.

இந்த ஜெயக்குமார், அமைச்சர் பவானி கருப்பனின் ஆதரவாளர். அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற 5 பேரும் எம்.எல்.ஏ. தோப்புவின் ஆதரவாளர்கள். தலைவர், துணை தலைவர் பதவிகள் தோப்புவின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு போகக் கூடாது என்றும் இங்கு தி.மு.க.உறுப்பினர்கள் மூவருடன் கூட்டணி அமைத்து சுயேச்சை அணியும் தி.மு.க.உறுப்பினர்களும் பதவியை பெறுவதற்கு மறைமுகமாக செயல்படுகிறார் அமைச்சர் கருப்பணன் என்றும் தோப்பு தரப்பு ர.ர.க்கள் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT