ADVERTISEMENT

அதிமுக அமைச்சர்களை எதிர்க்கும் திமுக வேட்பாளர்கள்...!

12:29 PM Mar 13, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில், 130 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. 18 தொகுதிகளில் திமுகவுடன் பாமக மோதுகிறது. 14 தொகுதிகளில் பாஜக மோதுகிறது. 4 தொகுதிகளில் தமாகா நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 24 அமைச்சர்களுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் நேரடியாக மோதுகின்றனர்.

அதன்படி எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக வேட்பாளர் சம்பத்குமார் போட்டியிடுகிறார். அதேபோன்று போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பிஎஸ்க்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன், தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாதிபதி, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக மணிமாறன், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஐட்ரீம் ரா.மூர்த்தி, ஜோலார்ப்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தேவராஜ், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பென்ஜமீனுக்கு எதிராக காரப்பாக்கம் கணபதி, விராலிமலை தொகுதியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக பழனியப்பன், கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில்பாலாஜி, பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக பி.கே. முருகன்.

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாபா. பாண்டியராஜனுக்கு எதிராக நாசர், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிராக டாக்டர் லட்சுமணன், ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக எஸ்.எஸ்.அன்பழகன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக மதிவேந்தன், திருச்சி கிழக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக இனிகோ இருதயாராஜ், குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் பி.தங்கமணிக்கு எதிராக எம். வெங்கடாச்சலம், பவானி தொகுதியில் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எதிராக கே.பி.துரைராஜ், திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக மு.மனிமாறன்.

மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு எதிராக சின்னமாள், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தங்கப்பாண்டியன், சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமிக்கு எதிராக ஈ.ராஜா, வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக வேதரத்தினம், நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜூக்கு எதிராக ஜோதிராமன், கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு எதிராக அய்யப்பன் என 24 திமுக வேட்பாளர்கள் அதிமுக அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT