Skip to main content

காங்கிரஸ் உடனான கூட்டணி தொடருமா? டி.ஆர்.பாலு பதிலால் கூட்டணியில் பரபரப்பு

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய குழுக்களின் தலைவர், துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கனிசமான இடங்களை ஒதுக்காமல் புறக்கணித்து விட்டது திமுக. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் தொடங்கி முக்கிய நிர்வாகிகள் வரை கெஞ்சிப் பார்த்தும் பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்கள் இடம் தரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி நொந்து போனது. 

 

Congress alliance? - K S Alagiri Issue - T. R. Baalu - Interview

 



இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், கே.எஸ்.அழகிரியை தொடர்புகொண்டு,  ‘’ கூட்டணிக்குள் என்ன பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் ? காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட தர முடியாது என திமுக அடம் பிடிக்கிறது. எங்களை கிள்ளுக்கீரையாக திமுக மா.செ.க்கள் பார்க்கிறார்கள் ‘’ என கொந்தளித்தனர். இதனையடுத்து, கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமியும் இணைந்து திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையை வாசித்தனர். 

அதில், நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடங்கத்திலிருந்தே எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.  303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் படஹ்விகளில் 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 1 மாவட்ட ஊராட்சி மாவட்ட பதவியோ வழங்கப்படவில்லை.  இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ‘’ என சுட்டிக்காட்டியுள்ளனர். 

 



கூட்டணி தர்மத்திற்குப் புறம்பானது என்கிற வார்த்தைகள் திமுக தலைமையை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அழகிரியின் அறிக்கை தங்களுக்கு ஏற்புடையதல்ல என்கிற ரீதியில், சோனியா காந்திக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறது அறிவாலயம்.

இதற்கிடையே, தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிராக சோனியா தலைமையில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவின் போது ராகுல்காந்தி, மம்தா பானர்ஜியிடம் வலியுறுத்தியவரே ஸ்டாலின்தான். அப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாததன் பின்னணியில் நிறைய சந்தேகங்கள் உண்டு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 



இந்தநிலையில் டெல்லியில் சோனியாகாந்தியை கே.எஸ்.அழகிரி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

அதேநேரத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுகவினர் கவலையில் இருந்தனர். கூட்டணி தர்மத்தை காக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது தவறான அறிக்கை. அந்த அறிக்கையை அவர் தவிர்த்திருக்கலாம் என்றார்.

காங்கிரஸ் உடனான கூட்டணி பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறதா? என்ற கேள்விக்கு, பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா இல்லையா என்பதை காலம் பதில் சொல்லப்போகிறது என்றார். காலம் பதில் சொல்லும் என்ற டி.ஆர்.பாலுவின் பதிலால் கூட்டணி உள்ள கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்குமா இருக்காதா என்ற விவாதங்கள் நடந்து வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்