Ex pmk member  joins to DMK

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

Advertisment

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட ங்களில் இருந்து மக்களும், கட்சிக்காரர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவரும் திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாமக செயலாளராகவும் இருந்த ஜோதி முத்து மற்றும் முன்னாள் மாநில துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட சில பாமகவினர் முதல்வர் ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைய இருக்கின்றனர்.

Advertisment

ஆனால் பாமக வடக்கு மாவட்ட செயலாளரானன ஜோதி முத்து பாராளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளரான திலகபாமாவுக்காக தேர்தல் வேலைபார்த்துக் கொண்டுதான் இருந்தார். அதைபோலவேதிலகபாமா வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உடன் சென்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை ஜோதி முத்து தான் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அங்கு வந்த கட்சி தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரியாணி வர காலதாமதமானதால் வேட்பாளருக்கும் ஜோதி முத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Ex pmk member  joins to DMK

அதனைத் தொடர்ந்துதான் அடுத்த24 மணி நேரத்திலேயே ஜோதி முத்துவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பாமக தலைமை அதிரடியாகத்தூக்கியது. இதனால் ஜோதி முத்து மனம் நொந்து போயிருந்தார். இந்த நிலையில் தான் ஆளுங்கட்சியான திமுகவில் இணைய ஜோதி முத்து முடிவு செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதற்கு அமைச்சர் எங்கள் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தான் இரண்டு அமைச்சர்களும் ஆலோசித்து ஜோதி முத்து மற்றும் முன்னாள் மாநில துணைத்தலைவர் சீனிவாசனை கட்சியில் இணைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று தேனி பெரியகுளம் அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வரும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜோதி முத்துவும், சீனிவாசனும் திமுகவில் இணைய உள்ளனர் இது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.