ADVERTISEMENT

திரிபுரா வெற்றிக்குப் பின் பா.ஜ.க.வின் முதல் நடவடிக்கை என்ன தெரியுமா?

04:29 PM Mar 05, 2018 | Anonymous (not verified)

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, அங்குள்ள சாலைகளின் பெயர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் கடந்த 25 ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்தது. அம்மாநிலத்தில் உள்ள 59 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 43 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 16 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில், பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க இருக்கிறது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தை கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல சாலைகள் மற்றும் தெருக்களுக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. இந்தப் பெயர்களை மாற்றி, உள்நாட்டு மற்றும் உள்ளூர்த் தலைவர்களின் பெயர்களை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் மூளையாக செயல்பட்ட சுனில் தியோதர், ‘இடதுசாரிகள் உள்ளூர் தலைவர்களின் பெயர்களை எங்குமே பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர்கள் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியைக் கூட நினைத்துப் பார்க்காதவர்கள் அவர்கள்’ என தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT