ADVERTISEMENT

உதயநிதியை கைது செய்ய பாஜக போட்ட திட்டம்... ஆக்சன் எடுக்க தயாரான எடப்பாடி... அலெர்ட்டான திமுக!

05:33 PM Dec 19, 2019 | Anonymous (not verified)

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யும்படி டெல்லியில் இருந்து ரகசிய உத்தரவு வந்திருப்பதாக கூறிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, இளைஞரணி சார்பில் கடந்த 13-ந் தேதி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களிலும் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையில் கலந்துகிட்ட உதயநிதி ஸ்டாலின், சட்ட மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் உட்பட தி.மு.க. இளைஞரணியினர் 644 பேரைக் கைது செய்த எடப்பாடி அரசு, அன்று மாலையே விடுவித்துவிட்டது. இந்தத் தகவல் மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்குப் போனது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


உடனே எடப்பாடி அரசைத் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சகம், சட்ட மசோதாவை எரித்தவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலை? என்று விளக்கம் கேட்டது. அதனால் உதயநிதி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறை, 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி செல்லும் போது அவரைப் பிரச்சாரக் களத்திலேயே கைது செய்யும் அதிரடித் திட்டமும் அரசிடம் இருப்பதாக கூறிவருகின்றனர். பாஜகவுடன், அதிமுக சேர்ந்து போடும் திட்டத்தை திமுக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறுகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT