கோவைப் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரரான அன்பரசனுக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கும் இடையே நிவாரண யுத்தம் தீவிரமாக நடந்துள்ளது என்கின்றனர். அன்பரசன், அரசு நிதியிலும் ரேசன் அரிசியிலும் கைவைத்து, நிவாரண உதவிகள் என்று விளையாட ஆரம்பிக்க, உண்மையாகவே நிவாரண உதவிகளில் ஈடுபட்ட சிங்காநல்லூர் தி.முக. எம்.எல்.ஏ.கார்த்திக், அவரின் நிவாரண முறைகேடுகளை வெளிப்படுத்த ஆரம்பிதுள்ளார். அதனால் எரிச்ச்சலான அமைச்சர் வேலுமணி தரப்பு, தி.மு.க.வின் நிவாரண உதவிகளை முடக்க வேண்டும் என்று ஒத்தைக்காலில் நின்னதால், தனியாக யாரும் நிவாரண உதவிகள் செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்று எடப்பாடி அரசு அறிவித்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_2.jpg)
இதனால் எடப்பாடி அரசைக் கண்டித்து தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் அறிக்கை விட்டதோடு, தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் கோர்ட்டுக்குச் சென்றார்கள். பா.ஜ.க. தரப்பும், ஆர்.எஸ்.எஸ். தரப்பும், எடப்பாடியின் இந்த நிவாரண அரசியல் பற்றி, மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதோடு, கரோனா நேரத்தில் டென்டர், ஆர்டர், பர்சேஸிங் என்று எல்லா மட்டத்திலும் தமிழக அரசில் ஊழல் வைரஸ் அதிவேகமாகப் புகுந்து விளையாடுகிறதுஎன்று உளவுத்துறையும் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடியைத் தொடர்புகொண்ட பிரதமர் அலுவலகம், நிவாரண உதவிகளில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று கடுமையான குரலில் அட்வைஸ் செய்தது. மேலும் கோர்ட்டிலும் கண்டனம் வெளிப்படலாம் என்பதால், நிவாரணத்தைத் தடுக்கவில்லை என்று கூறுகின்றனர். அதோடு முறையாக அனுமதி வாங்கிவிட்டு செய்யச் சொல்கிறோம் என்று பல்டி அடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)