ADVERTISEMENT

பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

10:17 AM Jan 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உயர்மட்ட குழு கூட்டம் கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட உயர் மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த உயர்மட்ட குழுவில் ஈரோடு இடைத்தேர்தல் பற்றியும், மாநில கட்சியில் அடுத்தடுத்த கட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், நடிகை நமீதா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டும் அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பிற்பகலில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் பற்றி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், கட்சி முன்னெடுத்து செல்ல வேண்டிய செயல் திட்டங்கள், பூத் கமிட்டிகள் அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பாரத பிரதமருக்கு பாராட்டும். வாழ்த்தும் தெரிவித்தல், 2023 ஆம் ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு செட்டம்பரில் புதுடில்லியில் நடைபெறுவதற்கு 'முன் சென்னையின் மாமல்லபுரம், கேரளாவின் திருவணந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களில் இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பு கூட்டங்கள் நடைபெற்று உலகளாவிய வர்த்தகம், சுற்றுசூழல், பாதுகாப்பு, கலாச்சார பரிவர்த்தனை, சுற்றுலா மேம்பாடு போன்ற பல முக்கிய முடிவுகள் குறித்து கலந்தாய்வு நடைபெறும். எதிர்காலத்தில் உலகபிரச்சனைகள் தீர்க்கப்படும் நாடாக நம் பாரததேசத்தை உருவாக்கி நமக்கு பெருமை சேர்த்த நம் பாரதப்பிரதமர் ஜி20 கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர மோடிக்கு பாராட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துகிறது.

தமிழக ஆளுநர் ஒரு விழாவில் பேசியதை திசை திருப்பி மொழி அரசியலை முன்னெடுத்து சட்டசபையில் ஆளுநரை அவதூறு செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம், பெருக்கெடுத்தோடும் ஊழல் நிர்வாக சீர்கேடு என கடந்த ஒன்றரை வருட சோதனையான ஆட்சியை மூடி மறைக்க தமிழகம்-தமிழ்நாடு என்ற விவகாரத்தை ஊதி பெரிதாக்கி மொழி ரீதியான பதட்டத்தை உருவாக்க முனைந்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

திட்டமிட்ட ரீதியில் ஆளுநரை அவமானப்படுத்தி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற தி.மு.க பேச்சாளரின் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு ஆளுநருக்கு கொலைமிரட்டல் விடுத்ததையும், சட்டசபையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை என்று கூறி சட்ட சபையின் கண்ணியத்தை குலைத்து, ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ் .பாரதியையும் இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க தமிழக காவல் துறை விரைந்து செயல்பட வேண்டும். மேலும் தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சேது கால்வாய்த்திட்டம் இராமர்பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்படவேண்டும்.

சுற்றுப்புற சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கடல் வாழ் உயிரினங்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் 'சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் திட்டத்தை, பழைய சீரமைப்பு 4ஏ அடிப்படையில் ராமர் பாலத்தை ஒடித்து தமிழக அரசு கொண்டுவர நினைத்தால் பா.ஜ.க அதைக் கடுமையாக எதிர்க்கும். மேலும் தி.மு.க அரசு கடந்த ஆட்சியில் இத்திட்டத்தில் கால்வாய் ஆழமாக தோண்டப்பட்ட நிலையில் அந்த கோடிக்கணக்கான டன் மணல் எங்கே கொண்டு செல்லப்பட்டது? எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டது? போன்ற விவரங்களை மூடி மறைத்துள்ளதோடு, கனிம வளங்கள் அதிகம் உள்ள மணல் எங்கு எடுத்து செல்லப்பட்டது? அந்த மணலில் அணு ஆற்றலுக்குப் பயன்படும் யுரேனியம் அதிகளவில் உள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மணல் சீனாவுக்கு எடுத்து சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது போன்ற பல்வேறு புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருவதோடு, இதன் மூலம் மேலும் கனிம கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் தமிழக அரசின் முயற்சியை தடுத்து பெரும்பான்மையான இந்திய மக்களின் இறை நம்பிக்கைக்குரிய இராமர் பாலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சேதுகால்வாய்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

காசி தமிழ்சங்கமம் இந்திய மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பாலம் என்பதை பறைசாற்றும் வகையில் நடந்ததற்கும், காசி தமிழ் சங்கமம் உலக தமிழர்களின் ஒப்பற்ற திருவிழாவாக தலைமை ஆன்மிக பீடமான காசியில் நடந்தேறியதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். திராவிட மாடல் அரசு என்றும் பெரியார் அண்ணா கலைஞர் வழி வந்த அரசு என்றும் பகுத்தறிவு சுயமரியாதை சீர்திருத்தம் போன்றவை எங்கள் கொள்கை என்று வாய்ஜாலம் காட்டி பிதற்றிக்கொண்டிருக்கும் தமிழக அரசின் தலைமை அமைச்சருக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இளமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், மனித கழிவுகளை கலந்த கொடூரமான தீண்டாமை குற்றவாளிகளை குற்றம் நிகழ்ந்து ஒருமாதம் கடந்தும் கைது செய்யாதது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு தோற்று போய்விட்டது என உணர்த்துவதுடன், ஈவு இரக்கம் இல்லாத குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முள்பாக நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்று தர வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

பெண்ணுரிமை பேசும் தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்ட தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் அவர் முன்னிலையிலேயே தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு நின்ற இரண்டு பெண்காவலர்களை மானபங்கப்படுத்தியுள்ளதற்கு முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் காவலர்களை தன் துறையின் உயர் அதிகாரிகளை பயன்படுத்தி வழக்கை வாபஸ் வாங்க வைத்துள்ளார். முதலமைச்சரின் கையாலாகாத தனத்தை வன்மையாக கண்டிக்கிறது. பொங்கல் கரும்பு கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்து விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்கவில்லை, மேலும் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்புக்கும் உற்பத்தி செலவிற்கேற்ற விலை வழங்கவில்லை. அதேபோல நெசவாளர்களுக்கு உரிய நேரத்தில் நூல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொங்கலுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட வேஷ்டி சேலைகள்கூட வழங்க முடியாமல் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கிறது.

தமிழகத்தில் ஊழல் திராவிட மாடல் அரசும், அமைச்சர்களும் ஒரு நிறுவனம் உள்ளே வரும்போதே தமிழகத்தில் உங்களுக்கு இதைப் போன்ற வாதிகளை செய்து தருகிறோம் எங்களுக்கு என்ன தருவீர்கள் என கையேந்தும் செயல்களால் முன்னோடியாக இருக்க வேண்டிய தமிழகம் 302ல் நான்காம் இடத்தில் உள்ளது. ஜீ ஸ்கொயர் என்று பினாமி பெயரில் நடத்தப்படும் நிறுவனம் குறித்தும் அதற்கு சாதகமான அதிகார துஷ்பிரயோகம் குறித்தும், அந்த நிறுவனத்திற்கும் தமிழக முதல்வரின் குடும்பத்திற்கும் உள்ள உறவு குறித்தும் சமுதாயம் தனது சந்தேகங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. பல இடங்களில் மற்றவர்களின் சொத்துக்களை அந்த நிறுவனத்திற்கு விற்க நிர்பந்திக்கப்படும் தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. தி.மு.க ஊழல்கள் குறித்தும், அதிகார துஷ்பிரயோகம் குறித்தும் அனைத்து ஒன்றிய நகர பகுதி மண்டலங்களிலும் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது என தீர்மானிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT