தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக அமைச்சர்களின் செய்லபாடுகள் குறித்தும்அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வருகிறார். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் பொழுதும்தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளைஅடுக்கி வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, '' மீண்டும் மின்வெட்டு வரலாம் எனவே மக்கள்ஜெனரேட்டரைவாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பிஜிஆர்நிறுவனம் என்ற பெயரில்பேப்பரில் இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோஒப்பந்தம் செய்துள்ளது. நீட்தேர்விலிருந்துதமிழ்நாட்டுக்குவிலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன்''எனத்தெரிவித்துள்ளார்.