journalists like a monkey jumping on a tree;Journalists' forum condemns Annamalai

தன்னை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்களைக் கடுமையான வார்த்தைகளால் சாடிய அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்ட நிலையில் அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் அண்ணாமலை. செய்தியாளர்களை நோக்கி பேசிய அண்ணாமலை ''என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது... நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா...நவுருங்க'' என பேசினார்.

Advertisment

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்தபாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம். பத்திரிகையாளர்களை கட்சி,ஆட்சி என இழிவுபடுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என அறிக்கையில் இருந்தது.