ADVERTISEMENT

ஆட்சியில் உள்ள முதல்வரை இறந்தார் என காட்டும் விக்கிபீடியா!

11:20 AM Mar 14, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் முதலமைச்சராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். இவர் இறந்த நாள் இன்று என விக்கிபீடியா வின் மாதந்திர நாள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார் மனோகர்பாரிக்கர். 2017ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார். குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார்.


ADVERTISEMENT



இந்நிலையில் விக்கிபீடியாவின் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்று மார்ச் 14ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தினத்தை பற்றிய தகவல்களை விக்கிபீடியா வழங்கும். அதன்படி இன்று உலகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், உலகத்தில் முக்கியமானவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். இறந்தவர்கள் வரிசையில் 1955ல் மனோகர்பாரிக்கர் – இந்திய அரசியல்வாதி, கோவா முதல்வர் என வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பெயரை க்ளிக் செய்து உள்ளே சென்றால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1955 டிசம்பர் 13ந்தேதி பிறந்தார் என்றும், அவரது அரசியல், குடும்பம் பற்றிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன. அவர் இறந்த ஆண்டு பற்றிய குறிப்பு அதில்யில்லை என்பது குறிப்பிடதக்கது. தவறுதலாக பதிவானதா அல்லது திட்டமிட்டே யாராவது அப்படி உருவாக்கினார்களா என்பது தெரியவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT