Advertisment

fhghb

தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கோவா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்தின் போது முதல்வர் மனோகர் பாரிக்கருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை திடீரென மனோகர் பாரிக்கரின் அலுவலகத்திற்கு சென்ற ராகுல் அவருடன் 15 நிமிடங்கள் தனிமையில் பேசியுள்ளார். இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு தான் என்றும் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்மனோகர் பாரிக்கரின் உடல் நலம் பற்றி ராகுல் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment