ADVERTISEMENT

சமஸ்கிருதத்தை வரும் தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் - மோடி

11:45 AM Nov 05, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி இன்று (05.11.2021) காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம், உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். அங்கு சென்ற அவரை டேராடூனில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலுக்குச் சென்ற மோடி, வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அங்கு ஆதி சங்கராச்சார்யா சிலையை திறந்துவைத்தார். மேலும், சங்கராச்சார்யாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் திறந்துவைத்தார். அதேபோல், ரூ. 308 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களையும் துவக்கிவைத்து சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, "யாத்திரை மூலம் கிடைப்பது மகிழ்ச்சி மட்டும் அல்ல, பாரம்பரியமும்தான். யாத்திரைகள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினருக்கு நாம் கொண்டுசெல்ல வேண்டும். அதுவே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக அனைவரும் தன்னால் ஆன பணிகளை செய்ய வேண்டும்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT