Guards who went to protect the Prime Minister met with a car accident; 6 people lost their lives

ராஜஸ்தானில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க சென்ற காவலர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தில் ஜூஞ்ஜூனு என்ற இடத்தில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்கான பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்புப் பணிக்காக காவலர்கள் சென்ற வாகனம் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆறு காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.