
இந்தியாவில் கரோனாபரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்துபல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (08.04.2021) பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொண்டார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில், இன்று இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார் பிரதமர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)