ADVERTISEMENT

ஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று!! -பிரதமர் மோடி !!

09:48 AM Jul 20, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜனநாயகத்தில் இன்றைய நாள் மிக முக்கியமான நாள் என பிதர்மர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 18-ஆம் தேதி நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மகாஜன் அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாங்கள்தான் பெரிய கட்சி எனவே நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும் என முறையிட்டார். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 20-ஆம் தேதி முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவே நாளை மற்ற அலுவல் பணிகள் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்.

அதெபோல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் மற்ற கட்சிகளால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிகையில்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் என தெரிவித்தார். மொத்தம் 535 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜவின் சொந்த எம்பிக்கள் எண்ணிக்கை சபாநாயகர் உட்பட 274. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்கு உள்ள நிலையில் பாஜக சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தில் இன்றைய நாள் முக்கியமான நாள். இன்று நாடே நம்மை உற்றுநோக்கி கொண்டிருக்கும். இன்றைய நாளில் நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என நம்புகிறேன். மக்களுக்கும், அரசியலைமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT