style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாராளுமன்றத்தில் இன்று சுமார் 11 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதானவிவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தைதெலுங்குதேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா தொடங்கினார். பிஜூ ஜனதா தளம் எம்.பிக்கள்நம்பிக்கையில்லா தீர்மானம் மீதானவிவாதத்தை புறக்கணித்துவெளிநடப்பு செய்தனர். அதேபோல் சிவசேனா கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதானவிவாதத்தில் பங்கேற்கவில்லை.
சூடுபிடித்த விவாதத்தில் மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்குகொடுக்கப்பட வேண்டிய நியாமான கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லாவிவாதத்தைமுன்வைத்தார். அவரின் கருத்துக்கு டி.எஸ்.ஆர்கட்சினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் அமளி நிலவியது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை6 மணிக்குபாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.