ADVERTISEMENT

மோடி மீது வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்...

04:33 PM Apr 29, 2019 | kirubahar@nakk…

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் நடந்து வருகின்றது. இதனையடுத்து அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்படி பிரச்சாரங்களில் பேசும்போது மோடியும், அமித்ஷாவும் புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர் நீத்த வீரர்களையும் பற்றி வாக்கு சேகரிக்கின்றனர். இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.

தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் பிரதமர் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT