மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

narendra modi speech in balod for loksabha election

அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சத்தீஸ்கரின் பலோட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸும், அதனை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றன. நாங்கள் ஒவ்வொரு ரூபாய்க்கும் திறம்பட பயன்படுத்துவதற்காக தேர்தல்களில் போட்டியிடுகிறோம். நாட்டின் பாதுகாப்பு துறையை பலவீனப்படுத்துவதற்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் பாஜக பாதுகாப்பு துறையை வலுப்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றன" என கூறினார்.