மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக நாளை 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment

modi speech at gujarat

இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தின் ஜுனாகத் நகரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியது, நம் நாட்டின் எதிர்க்கட்சியினரைப் பாதித்துள்ளது. நம்முடைய தேசம் பாதுகாப்பாக உணரும்போதுதான் வளர்ச்சி அடைய முடியும். நான் நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழிக்க முயற்சி செய்கிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து ஒழிக்க முயற்சி செய்கிறார்கள். உங்கள் காவலன், உங்கள் மண்ணின் மைந்தனான எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கூறாத அவச்சொற்களே கிடையாது என கூறி காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.