ADVERTISEMENT

மக்களவையில் 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

04:04 PM Mar 05, 2020 | santhoshb@nakk…

மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.பி-களை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த திங்கள்கிழமை கூடியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளான இன்று கரோனா பற்றி விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்பு அவை மீண்டும் கூடிய நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கொகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ் , உன்னிதன், பென்னி பெஹ்னன், குர்ஜித் சிங் ஆகியோரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

தற்காலிக சபாநாயகர் ரமாதேவி கையில் இருந்த ஆவணங்கள் கிழித்து மக்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT