நாடாளுமன்ற இன்றைய கூட்டத்தொடரில் ஆதார் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவையில் குடியரசுத்தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒவ்வொரு கட்சிகளின் சார்பிலும் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அதே போல் மாநிலங்களவையில் மாநிலத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் மற்றும் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்க வலியுறுத்தி தமிழகம் உட்பட பல மாநில உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசி வருகின்றனர்.

Advertisment

PARLIAMENT WORKING TIME EXTEND

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மக்களவையின் கூட்டத்தொடர் நேரத்தை இரவு 08.00 PM வரை நீடிப்பதாகவும், மேலும் ராஜ்ய சபா கூட்டத்தொடர் நேரத்தை இன்று இரவு 07.10 PM வரை நீடிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.