Skip to main content

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

The second session of the Parliamentary Budget Session has begun!

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (14/03/2022) காலை 11.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, மக்களவையும், மாநிலங்களவையும் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறது. 

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். 

The second session of the Parliamentary Budget Session has begun!

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (14/03/2022) தாக்கல் செய்கிறார். இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களும் விவாதத்திற்கு வரவுள்ளன. 

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடந்த நிலையில், இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்