ADVERTISEMENT

புதுச்சேரி சட்டப்பேரவை 3 நாட்கள் மூடல்! 

05:53 PM Jul 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய, வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.


புதுச்சேரியில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை செயலக கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அந்த வாக்குச்சாவடி மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம், எம்.எல்.ஏக்கள் அறை, பேரவை செயலக அலுவலகம் மற்றும் சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பேரவை வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.


புதுச்சேரியை பொறுத்தவரை 30 எல்.எல்.ஏக்கள், தலா ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை உறுப்பினர் உள்ள நிலையில், மக்களவை உறுப்பினர் மட்டும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளார். ஆகவே இந்த தேர்தலில் புதுச்சேரி வாக்குச்சாவடியில் ஒரு எம்.பி மற்றும் 30 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றார்கள். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு 16 ஆக உள்ளது. ஒரு எம்.பிக்கு 700 என 1,180 வாக்குகள் குடியரசு தலைவர் தேர்தலில் புதுச்சேரியிலிருந்து பதிவாகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT