/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narayana samy.jpg)
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ‘’புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வாரியத் தலைவர் உள்ளிட்ட இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகித்து வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இரட்டை ஆதாயம் தரும் பதவிகள் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தவித கடிதமும் வரவில்லை. ஆனால் புதுச்சேரியில் ஒரு சிலர் மலிவு விளம்பரத்திற்காக ஆதாரமில்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு கவிழும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். காவலர் பணிக்கான வயது வரம்பை புதுச்சேரி அரசு 22 ல் இருந்து 24 ஆக தளர்த்தியது. இதற்கு உத்தரவிட வேண்டிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்புகிறார். பரிந்துரை சட்டமாகாது. ஆளுநர் மறுக்கும் விவகாரத்தை உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்திருப்பதாக கூறிய அவர் அகில இந்திய அளவில் புதுச்சேரியில் தான் பெட்ரோல் விலை குறைவு. கடலூருக்கும் புதுச்சேரிக்கும் வித்தியாசம் 6 ரூபாய். அதனால் புதுச்சேரியில் பெட்ரோல் -டீசல் வரியை குறைக்க முடியாது’’என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)