r

மதுபான பாட்டில்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறைத்துறை காவலர் மோதி பெண் உயிரிழந்தார். உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையம் முன்பு அமர்ந்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ro

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி ஆனந்தவல்லி. இவர் தனது ஊரில் ஊரக வேலை திட்டத்தில் பணி புரிந்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிறைத்துறை காவலர் அருள்ராஜ் என்பவர் மோதியதில் ஆனந்தவல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விருத்தாச்சலம் கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisment

ro

இந்நிலையில் சம்பவ இடத்தில் கிடந்த பையை பரிசோதித்த போது அதில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட மதுபாட்டில்கள் அதிகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

p

மது போதையில், மதுபாட்டில்களுடன் வாகனத்தை ஓட்டி வந்து, பெண்மணியை கொன்ற காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு நிலவியது.

Advertisment

பின்னர் காவல் துறையினர் சமரசம் செய்ததையடுத்து கலைந்து சென்றனர்.