ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் இடஒதுக்கீடு அளித்த மாநிலம்!

03:59 PM Mar 23, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் இன்று ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

ஒடிசா அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு கடந்த ஆண்டு ஒடிசா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில், ஒடிசா சட்டப்பேரவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதனைத்தொடர்ந்து இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT