struggling public school students; Rs. MLA who gave 1 lakh

Advertisment

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கோவிலாம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில், பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு பள்ளி வளாகத்தில் இடம் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்ட முடியாமல் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் அடைந்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் மாணவர்களின் நலன் கருதி அவரின் சொந்த நிதி ரூ. 1 லட்சத்தைப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு தனியாரிடம் இடம் (மனை) வாங்குவதற்கு வழங்கினார். இது மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.