Published on 23/09/2022 | Edited on 23/09/2022

கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியரை பழிவாங்க நினைத்து பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பள்ளியில் பணி புரியும் தமிழ் ஆசிரியர் அனு முத்துராஜ் தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் ஆசிரியர் அனு முத்துராஜ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.