ADVERTISEMENT

இளம் மேயருக்கு வந்த நெருக்கடி; கேரளாவில் பரபரப்பு

01:23 PM Nov 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 21 வயதிலேயே திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் இந்தியாவிலேயே இளம் வயது மேயராவார். இந்நிலையில் ஆர்யா ராஜேந்திரன் கையெழுத்துடன் வெளியான கடிதம் ஒன்று கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 295 தற்காலிகப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் பட்டியலைத் தருமாறு கேட்டு மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் கையெழுத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதனை மேயர் ஆர்யா ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மேயர் ஆர்யா ராஜேந்திரன் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இது தொடர்பாக விசாரணை நடத்தக் கடிதம் அளித்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "நான் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இதுபோன்ற கடிதங்கள் அனுப்பிய பழக்கமில்லை. உண்மையில் அதில் என்ன எழுதியிருந்தது என்று எனக்குத் தெரியாது. அதன் திரிக்கப்பட்ட கடிதத்தை நான் பார்த்தேன். என் அலுவலகத்தில் யாரையும் சந்தேகிக்க முடியவில்லை. அதனால் முறையான விசாரணை வேண்டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தக் கடிதம் தொடர்பான உண்மையை அறிய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு டி.ஜி.பி அனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT