arya rajendran - sachin dev

Advertisment

கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் 21 வயதிலேயே திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் நாட்டின் இளம் வயது மேயராவார்.

இந்தநிலையில் இவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான கே.எம் சச்சின் தேவுக்கும் இம்மாதத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த தகவலை சச்சின் தேவின் தந்தை வெளியிட்டுள்ளார். 28 வயதான சச்சின் தேவ், கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

மேலும் சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் இந்திய மாணவர் சங்கத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.