ADVERTISEMENT

கேரளாவுக்கு இன்று நிதி உதவி அளித்த பல மாநில அரசுக்கள்...

05:47 PM Aug 18, 2018 | santhoshkumar


கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், வெள்ளச்சரிவினாலும் 324 பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மிடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நிறைய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிஹார், ஒடிஷா ஆகிய மாநில அரசுக்கள் நிதி உதவி அளித்தது. இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி (10 கோடி), மஹராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஷ் (20 கோடி), ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் (5 கோடி), உத்திரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (15 கோடி), மத்திய பிரேதச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங்(10 கோடி), பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங்(5 கோடி) நிதி உதவி அளித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT