வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது என்கிறது கேரளா அரசும், வானிலை அமைப்பும். கேரளாவில் உள்ள மலப்புழா, இடுக்கு உட்பட 10 மாவட்டங்கள் மழை நீரால் தத்தளிக்கின்றன. கேரளாவின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து அணைகளும் திறந்தவிடப்பட்டுள்ளன.வீடுகள் மூழ்கியுள்ளன, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, சாலைபோக்குவரத்துக்கான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உதவிப்பொருள்களை கூட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்பிவைக்க முடியாமல் தவிக்கின்றது அரசாங்கம்.

Advertisment

கேரளாவின் வெள்ள பாதிப்புகளை காண மத்திய அரசின் உள்துறை அமைச்சர்கேரளா முதல்வர் மற்றும் எதிர்கட்சிகட்சி தலைவரோடு சேர்ந்து விமானத்தில் பார்வையிட்டு சென்றார். அவர் டெல்லி சென்றபின் மத்தியிலும் ஆளும் மோடி சர்க்கார், கேரளாவுக்கு வெறும் 100 கோடியை மட்டும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

kerala

இதனால் அதிருப்தியான கேரளா முதல்வர் பினராயிவிஜயன், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதிலிருந்து மீண்டு வர மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என வெளிப்படையாக வேண்டுக்கோள் விடுத்தார். இதனை ஏற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களோ, சாதாரணமானவர்களோ யாராக இருந்தாலும் உதவி வழங்க வந்தால் அதனை நேரடியாகவே பெற்றுக்கொள்கிறார் கேரளா முதல்வர். அவர்களுக்கு அப்போதே நன்றியும் தெரிவிக்கிறார். நெட் பேங்கிங் மூலமாகவும் பலரும் பணம் அனுப்புகிறார்கள்.

Advertisment

அப்படி பணம் அனுப்பியவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது கேரளாவின் நிதியமைச்சகம். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் தந்தவர்களின் முகவரி மற்றும் நெட்பேங்கிங் மூலமாக பணம் அனுப்பியவர்களின் முகவரிக்கு உடனடியாக அவர்கள் அனுப்பிய தொகையை பெற்றுக்கொண்டோம் என கேரளா நிதியமைச்சக முதன்மை செயலாளர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்புகிறார். அந்த அரசு கடித எண் மற்றும் முத்திரை, கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் அனுப்பிய தொகை, எந்த வழியில் பணம் வந்தது அதுப்பற்றிய விவரத்தோடு அந்த கடிதம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

kerala

முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குபவர்களுக்கு முறையாக நன்றி தெரிவித்து கடிதம் தரும் சம்மந்தப்பட்ட மாநில அரசு. இதுநடைமுறை. மக்களை காக்க வேண்டிய பெரும் நெருக்கடியில் உள்ள கேரளா அரசின் உயர் அதிகாரிகள், அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் நிதியுதவி அளித்தவர்களுக்கு முறையான நன்றியும், கடிதமும் உடனே அனுப்புகிறது. கடிதம் பெற்றவர்கள் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisment

2015ல் தமிழகத்தில் கடுமையான மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதன் மூலம் சென்னையே தத்தளித்தது. மின்சாரம்மில்லாமல், உணவுப்பொருள் இல்லாமல், இருக்க இடம்மில்லாமல் மக்கள் தவித்தனர். தவித்த மக்களுக்கு தமிழகம் மற்றும் பிற மாநில பகுதிகளில் இருந்து மக்களால், சமூக சேவை அமைப்புகளால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் ஜெ படம் போட்ட ஸ்டிக்கர் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தமிழகம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு சில ஆயிரம் முதல் கோடிகள் வரை பணமாக, காசோலையாக தமிழக முதல்வராக இருந்த ஜெ, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பலரும் வழங்கினார்கள். அப்படி வழங்கப்பட்ட தொகைக்கு இன்று நன்றி எனக்கூறி இன்றுவரை ஒரு நன்றிக்கடிதம் அனுப்பவில்லை தமிழகரசு என்கிறார்கள் நிதியுதவி வழங்கியவர்கள்.

உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நன்றியோடு உள்ளது கேரளா அரசு. 2015ல் நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றி எனச்சொல்லாமல் இன்றுவரை நன்றிக்கெட்டதனமாக உள்ளது தமிழகரசு