கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 300 பேருக்கு மேற்பட்டோர்பலியாகி உள்ளனர்.மேலும் மீட்பபுப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதால்13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள்மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள தண்ணூர்பகுதியில் மீட்புப்பணி நடைபெற்றது. அந்த பகுதியில் வெள்ளத்தில்சிக்கித்தவிக்கும் பெண்கள் மீட்கப்பட்டு படகுகளில் ஏற்றப்பட்டனர். ஆனால் வெள்ளநீர் பகுதியிலிருந்து ரப்பர் போட்டுக்களில் பெண்களால் ஏறமுடிவில்லை உயரம் அதிகம் என்பதால்என்னசெய்வதென்று தடுமாறிய மறுக்கணத்தில்அந்த பகுதியை மீனவர் சேர்ந்தஜெய்சல் என்பவர் சடார் என்று வெள்ளநீரில் மண்டியிட்டு படிக்கட்டு போல அமர்ந்து தன் முதுகினை படிக்கட்டுபோல் பயன்படுத்திபெண்களை ரப்பர் பொட்டில் ஏற்றினார். மீனவரின் அந்த செயல் அங்கு பெரிதும் கவனத்தை பெற்றது. தொடர்ந்து மீட்புப்பணிகள் தொய்வின்றி நடந்துவருகிறது.