ADVERTISEMENT

அரை நூற்றாண்டாக ஒரே எம்.எல்.ஏ... கேரளாவில் வரலாற்றை மாற்றிய கம்யூனிஸ்ட்...

03:08 PM Sep 27, 2019 | kirubahar@nakk…

கேரள மாநிலம் பலா தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர், மணி சி கப்பான் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள பலா கடந்த 1965 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை அத்தொகுதியில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று கடந்த 54 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக ஒருவரே இருந்து வந்துள்ளார். இந்த 54 ஆண்டுகால வரலாற்றை தற்போது இடதுசாரி கூட்டணி முறியடித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து கேரளா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய கே.எம் மாணி, 1965 முதல் சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து 12 முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார். 86 வயதான நிலையில் கே.எம் மாணி, கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து, அங்கு கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், இடதுசாரி கூட்டணி வேட்பாளர், மணி சி கப்பான் வெற்றிபெற்றுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT