The daughter of the IAS officer who jumped down from the 9th floor

Advertisment

கேரளமுதல்வா் பிணராய் விஜயனின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறையின் செயலாளராக இருந்துவருபவா் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஆனந்த சிங். இவருடைய மனைவி நிலம் சிங். இவா்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பவ்யா சிங் (16), இரண்டாவது மகள் ஹெரா சிங் (14). 2000ஆம் ஆண்டு கேரளா ஐ.ஏ.எஸ். கேடரான ஆனந்த சிங், கேரளாவைச் சோ்ந்த இ. அகமது மத்திய மந்திாியாக இருந்தபோது அவருடன் வெளியுறவுத்துறையில் பணியாற்றிவந்தாா். இந்த நிலையில், இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றுக்குச் சென்றிருந்த ஆனந்த சிங், 2019இல் கேரளஅரசில் பணியைத் தொடா்ந்தார். தற்போது பொதுப்பணித்துறைச் செயலாளராக பணியாற்றிவருகிறாா்.

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கேரளாவுக்கு அழைத்துவந்து, திருவனந்தபுரம் ஜவஹா் நகாில் உள்ள ஒரு குடியிருப்பில் 9வது மாடியில் வசித்துவந்தாா். இந்தக் குடியிருப்பில்தான் கேரளஅரசின் உயா் அதிகாாிகள் பல போ் வசித்துவருகிறாா்கள். இந்நிலையில், ஆனந்த சிங்கின் மூத்த மகளான பவ்யா சிங் பட்டம் கேந்திாிய வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார்.அவர், நேற்று முன்தினம் (16.09.2021) மதியம் வீட்டின் பால்கனியில் தனியாக இருந்த நிலையில், மேலிருந்து கீழே விழுந்து இறந்தாா். அந்த நேரத்தில்தான் ஆனந்த சிங்கும் வீட்டுக்குச் சாப்பிட வந்து லிஃப்டில் மாடிக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது குடியிருப்பு காவலாளியின் சத்தம் மூலம் இதைக் கேள்விப்பட்ட ஆனந்த சிங் மற்றும் அவரது மனைவி, கீழே வந்து மகள் இறந்து கிடப்பதைப் பாா்த்துக் கதறி அழுதனா்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனே முதல்வா் பிணராய் விஜயன், மந்திாி முகம்மது ரியாஸ், தலைமைச் செயலாளா், டிஜிபி, கலெக்டா் என அதிகாாிகள் அங்கு வந்து ஆனந்த சிங்குக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் கூறினர். மேலும், பிணராய் விஜயன் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து போலீசாா் முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராவைப் பாிசோதனை செய்ததில், பால்கனியில் இருந்து செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த பவ்யா சிங், திடீரென்று அங்கிருந்த மேஜையின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது தொியவந்தது. இதையடுத்து போலீசாா், பவ்யா சிங் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காக கீழே குதித்து தற்கொலை செய்தாா்? அவா் செல்ஃபோனில் யாருடன் பேசிக்கொண்டிருந்தாா் என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகிறாா்கள்.