/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/d (9).jpg)
இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரள மாநிலத்திலும் கரோனாபரவல் தீவிரமடைந்துள்ளது.
இதனையடுத்துகடந்த மே 8ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில்கரோனாபாதிப்பு கட்டுக்குள் வராததால், வரும் 16 ஆம் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கை 23 ஆம் தேதி வரை நீட்டித்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கரோனாஉறுதியாகும் சதவீதம் குறையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பினராயி விஜயன், கரோனாபரவல் அதிகமுள்ளதிருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய இடங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு விதிக்கப்படும்என அதிரடியாக அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)