ADVERTISEMENT

அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி-தேர்தல் ஆணையம் அதிரடி!

08:44 PM Sep 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT


அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் குறித்து ஒவ்வொரு வருடமும் தேர்தல் அதிகாரிகள் விவாதித்து சில முடிவுகளை எடுப்பார்கள். அப்படி ஒரு விவாதம் டெல்லியில் நடந்துள்ளது. அதன் முடிவில், சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

பொதுத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். அங்கீகாரம் கிடைக்காத கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே கருதப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு, தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் ரெகுலர் கிடைக்காது. சுயேச்சை சின்னம் தான் கிடைக்கும்.

அந்த வகையில், தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 253 மாநிலக் கட்சிகளைச் செயல்படாதவை என அறிவித்துள்ளது ஆணையம். மேலும், 86 கட்சிகள், தற்போது இல்லை எனத் தெரிவித்து அந்த கட்சிகளைப் பட்டியலிலிருந்தும் நீக்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல், பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இனி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் தேர்தலில் பங்கேற்கவில்லை எனில், அவைகளைப் பதிவு செய்யப்பட்ட பட்டியலிலிருந்தும் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் தலைமைத் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT