Published on 09/02/2021 | Edited on 09/02/2021

சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் தேதியை இறுதிப்படுத்தும் வகையில் மாநில - உள்ளூர் விடுமுறை தேதி விவரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் நாளை (10.02.2021) சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போதே வரயிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.