கோவை ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில்இடம் மாற்றுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இவர்கள் இருவரையும் தேர்தல் சாராத பணிகளுக்கு மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக கோவை மாவட்ட ஆட்சியராக எஸ். நாகராஜன் மற்றும் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.