Skip to main content

ஆந்திராவில் ஐந்து வாக்குச்சாவடி மையத்தில் மறு வாக்குப்பதிவு!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைப்பெற்றது.  ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. மேலும் பல பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டனர். எனவே இது குறித்து ஆந்திர மாநில தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கடிதம் எழுதினார். 

 

polling



இதில் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி , நெல்லூர் , குண்டூர் உள்ளிட்ட ஐந்து வாக்குச்சாவடி மையத்தில் மே 6 ஆம் தேதி மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே போல் இரு வாக்குச்சாவடி மையத்தில் மக்களவை தேர்தலும் , மூன்று வாக்குச்சாவடி மையத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் மே 23 அன்று எண்ணப்படுகிறது.

சார்ந்த செய்திகள்