ADVERTISEMENT

இளைஞரின் உயிரை பறித்த 450 கோடி ரூபாய்... சந்தேகத்தால் நண்பர்களே உயிரை எடுத்த பரிதாபம்...

10:23 AM Sep 02, 2019 | kirubahar@nakk…

கிரிப்டோகரன்சி தொழிலில் ஈடுபட்டுவந்த கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது நண்பர்களாலேயே கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷாகூர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிப்டோகரன்சி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த மூலமாக சுமார் 450 கோடி ரூபாய் வரை பலரிடம் வசூல் செய்து தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தொழில் நஷ்டம் அடைந்ததும், பணம் கொடுத்தவர்கள் இவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து தனது நண்பர்களுடன் கேரளாவை விட்டு வெளியேறிய அவர் டேராடூன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நண்பன் ஒருவனிடம், இருக்கும் குறைவான தொகையை வைத்து புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட அப்துல் ஷாகூரின் நண்பன், அவரது அக்கவுண்டில் கோடிக்கணக்கான பணம் இருக்கலாம். அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் தொழில் தொடங்கலாம் என கூறுகிறார் என்று நினைத்துள்ளார். எனவே அவரது அக்கவுண்ட் பாஸ்வோர்டை வாங்க நினைத்துள்ளார். எனவே அவரை டேராடூன் பகுதியில் தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஷாகூரின் மற்ற நண்பர்களும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரது பாஸ்வோர்டைகேட்டு அவரை சித்திரவதை செய்துள்ளனர்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என ஷாகுர் தெரிவித்த போதும், அவர்கள் நம்பாமல் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த தொடர் சித்திரவதைகளால் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரை எப்படியாவது காப்பாற்றி பாஸ்வோர்டை வாங்க வேண்டும் என நினைத்து அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து , அவரை மருத்துவமனை பார்க்கிங் பகுதியிலேயே விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த டேராடூன் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கொண்டு தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT