/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1539.jpg)
கரோனா தொற்று முழுமையாக இன்னும் முடிவுறாத நிலையில் ஒமைக்ரான் பாதிப்பின் வேகம் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவிலும் ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில், ஆரம்பத்தில் தினந்தோறும் 3, 4 என இருந்த தொற்று பரவல் தற்போது 57ஆகஉயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஒமைக்ரான் ஆய்வு கூட்டம் நடந்தது.
பின்னர் இது குறித்து பேசிய பினராயி விஜயன், “கேரளாவில் 98 சதவீதம் பேர் கரோனா முதல் டோஸ் தடுப்பூசியும், 77 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவின் உள்மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு இருப்பதால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புத்தாண்டையொட்டி வருகிற 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
டிசம்பர்31-ம் தேதி இரவு 10 மணி வரை தான் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்படும். அப்படி அனுமதியளிக்கப்படும் ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கபடும். கடற்கரைகள், மால்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் போலீசார் கண்காணிப்புக்காக நிறுத்தப்படுவார்கள். இரவுநேரஊரடங்கை பொதுமக்கள், வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)