/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_39.jpg)
கேரள மாநில முதலமைச்சர்பினராயிவிஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானத்தில் இருவர் முழக்கமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மாநிலமுதலமைச்சருக்குத்தொடர்பிருப்பதாக,ஸ்வப்னாசுரேஷ் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து அவருக்குஎதிராகக்காங்கிரஸ் கட்சியினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,கண்ணூரிலிருந்துவிமானத்தில் திருவனந்தபுரம் வந்தபினராயிவிஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் முழக்கமிட்டனர்.அவர்களை முதலமைச்சர் உடன் வந்த இடதுசாரி கூட்டணிக் கட்சித் தலைவர்ஜெயராஜன்தடுத்து நிறுத்திக் கீழே தள்ளினார்.
இதனிடையே, இருவரையும் பிடித்து விமான நிலையத்தில்விமானத்துறைஅதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)