ADVERTISEMENT

பாம்பாட்டி கையில் இந்திய பொருளாதாரம்... ஸ்பானிஷ் கார்ட்டூனை எதிர்க்கும் பாஜக

08:08 PM Oct 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு, எரிபொருள் விலையேற்றம் என உலக அளவிலான பல்வேறு சிக்கல்களுக்கு பிறகும் இந்திய பொருளாதாரம் உயர்வையே எட்டிவருதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் கரோனா காரணமாக உலகநாடுகள் பல வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது எனக் கூறி ஆளும் தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பானிய நாளிதழ் ஒன்றில் இந்திய பொருளாதாரம் குறித்த கார்ட்டூன் ஒன்று வெளியாகியுள்ளது. 'இந்திய பொருளாதாரத்தின் நேரம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கார்ட்டூனில் காவி உடை அணிந்து அமர்ந்து கொண்டு ஒருவர் மகுடி ஊத, அதிலிருந்து பொருளாதாரத்தின் கிராஃப் பாம்பு போல நீளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கார்ட்டூனுக்கு பாஜகவினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பாஜக எம்.பி, பி.சி.மோகன் இந்த கார்ட்டூனை எதிர்த்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'சுதந்திரம் அடைந்து பல சகாப்தங்கள் ஆன பிறகும் கூட எங்கள் உருவத்தை பாம்பாட்டிகளாக சித்தரித்திருப்பது முட்டாள்தனம். இந்த வெளிநாட்டு மனநிலையை நீக்குவது சிக்கலான முயற்சி' என பதிவிட்டு இருக்கிறார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT