அடுத்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவுள்ள நிலையில், ராகுல் காந்தி வெளிநாடு சென்றதாக பரவிய தகவல் குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

surjewala about rahul gandhis foreign trip

நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறிய காங்கிரஸ் கட்சி, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு திடீரென புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலா, "ராகுல் காந்தி தியான பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளார். பொருளாதார நிலைமை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 1-8 வரை நடக்கவுள்ள போராட்டம் கூட அவரது வழிகாட்டுதலின் படி மற்றும் திட்டத்தின்படி வரைவு செய்யப்பட்டதுதான்" என தெரிவித்தார்.