ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

09:51 AM Jan 18, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தநிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 8,891 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT