ADVERTISEMENT

கரோனா குறித்தான கூகுள் மேப்பின் அசத்தலான அப்டேட் பயன்பாட்டிற்கு வந்தது!

06:06 PM Oct 08, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்தாலும், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. கரோனா பாதிப்பு விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், பிரபல வழிகாட்டிச் செயலியான கூகுள் மேப், புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்தது.

அதன்படி, செயலியில் 'covid-19 info' என வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி புதிதாகப் பயணம் செய்யும் பகுதியில் உள்ள கரோனா பாதிப்பு விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பகுதியில் உள்ள பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பு அதிகம், குறைவு என வேறுபடுத்திக்காட்டும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கடந்த மாத இறுதியில் கூகுள் நிறுவனம் அறிவித்தது.

தற்போது இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இந்த வசதியானது மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் நாட்களில் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT