/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/google-map-final.jpg)
பயணம் செய்யும் பகுதியில் உள்ள கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து, பயனாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில்கூகுள் மேப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்தாலும், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. கரோனா பாதிப்பு விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பிரபல வழிகாட்டிச் செயலியான கூகுள் மேப், இது குறித்து புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது.
அதன்படி, செயலியில் 'covid-19 info' என வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி புதிதாக பயணம் செய்யும் பகுதியில் உள்ள கரோனா பாதிப்பு விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பகுதியில் உள்ள பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பு அதிகம், குறைவு என வேறுபடுத்திக்காட்டும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு விவரங்கள் நம்பத்தகுந்த பல தரப்புகளில் இருந்து பெறப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த அசத்தல் முயற்சியானது பெரும் வரவேற்பைப் பெறும்என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)